சனி, 12 நவம்பர், 2011

உலகிலேயே அழகான அம்மா!



ஓர் அழகான கிராமத்தின் மாலை வேளையில்,வயல்களில் வேலை செய்து களைத்த உழவர்கள்வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்தன் அம்மாவுடன்நடந்துசென்ற ஒரு சுட்டிப் பையன்பட்டாம்பூச்சிகளைக் கண்டு அவற்றின் பின்னால்ஓடினான்தன் தாயை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதை அப்போது தான் சிறுவன் உணர்ந்தான்.யாருமே இல்லாத அப்பகுதியில் சிறுவனின்அழுகுரல் மட்டுமே எங்கும் ஒலித்தது.
"
அய்யோவழி தெரியாம ரொம்பவந்துட்டேனே...அம்மா..அம்மா...எங்கம்மா கிட்டயாராச்சும் கொண்டு போய் விடுங்களேன்என கதறிஅழுதான்.

அப்போது அவ்வழியே வந்த ஒரு உழவன்,சிறுவனின் அழுகுரல் கேட்டு அவனிடம் சென்றார்
நீ யாரு...எதுக்காக இங்க தனியா நிக்கற?
நான் பட்டாம்பூச்சி பிடிக்க ஓடி வந்து அம்மாவதொலைச்சிட்டேன்..அவங்க வயல்ல வேலைசெஞ்சிட்டு வீட்டுக்கு போய்க்கிட்டுஇருக்காங்க..எனக்கு திரும்பிப் போக வழி தெரியல..என்று சிறுவன் கூறவேஅவனைசமாதானப்படுத்திய உழவன், "சரிபயப்படாதே...நான் உங்கம்மா கிட்ட கூட்டிகிட்டு போறேன்!உங்கம்மா எப்பிடி இருப்பாங்கன்னு சொல்றியா?"எனக் கேட்டார்.
அதற்கு "எங்கம்மா ரொம்ப அழகாஇருப்பாங்க...இந்த ஊருலயே அவங்க தான் அழகு!"என பெருமையுடன் பதிலளித்தான் சிறுவன்.

சிறுவனை அழைத்துக் கொண்டு ஊரை நோக்கிச்சென்ற உழவன்எதிரில் மிகவும் அழகான பெண்நடந்து வருவதைக் கண்டார்உடனே "தம்பிஇவங்கரொம்ப அழகாக இருக்கிறாங்கஇவங்க தானே உன்அம்மாஎனக் கேட்கதன் அம்மா இன்னும் அழகாகஇருப்பாள் என சிறுவன் பதிலளித்தான்.
வழியில் இரண்டு அழகான பெண்கள் தண்ணீர்சுமந்து செல்வதை உழவர் கண்டார்கண்டிப்பாகஇவர்கள் ரெண்டு பேரில் ஒருவர் தான் சிறுவனின்அம்மாவாக இருக்க வேண்டும் என்று நம்பியஉழவன்சிறுவனிடம் கேட்டார்.
ஆனால் "இல்ல... எங்கம்மா இவங்க எல்லாரையும்விட அழகா இருப்பாங்க!" என்று உறுதியாகக்கூறினான்.

அப்போது எதிரில் பதற்றத்துடனும்கண்ணீருடனும்ஒரு பெண் ஓடிவருவதைப் பார்த்த சிறுவன் "அதோஎன் அம்மாஅதுதான் என் அம்மாஎன் அம்மாகிடைத்து விட்டாள்!" என சந்தோஷக்கூக்குரலிட்டான்.

கறுப்பாகவும்ஒரு கண்ணில் பார்வையில்லாமலும்காட்சியளித்த அந்தப் பெண்ணைப் பார்த்த உழவன்...
அந்த ஊரே அதிரும் படி சிரித்தான். "இதுவாஉங்கம்மா..இவங்களையா அழகுன்னு சொன்ன"என்று சிருவனைப் பார்த்துக் கேட்டான்.

அதற்கு சிறுவன் மிகவும் பெருமையாக, "ஆமா...அவங்க என்ன ரொம்ப பாசமாபாத்துக்குவாங்க.. எல்லோர்கிட்டயும் அன்பாநடந்துக்குற இவங்க தான் உலகத்துலயே ரொம்பஅழாகானவங்க!" என்று பதிலளித்து விட்டுதன்தாயின் கையைப் பிடித்து துள்ளிக் குதித்துநடந்தான்உண்மையான அழகு எது என்பதைஉணர்ந்து கொண்ட உழவன்முகம் இருண்டு போய்அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான்
  நன்றி அம்புலி மாமா!