வியாழன், 2 செப்டம்பர், 2010

சிறுவர்களுக்கான விளையாட்டு – அலாவுதீன் (Aladdin Game)


அலாவுதீனின் அற்புத விளக்கு கதை எல்லாருக்கும் தெரியும். சினிமாவில் படமாகவும் வந்திருக்கிறது. குழந்தைகள் எல்லாருக்கும் மிகப்பிடிக்கும் இந்தக்கதாபாத்திரம் விளையாட்டாகவும் உள்ளது.

அலாவுதீன் விளையாட்டு மிக சுவாரசியமாக எதிரிகளை சண்டை போட்டு வெல்வது, ஆபத்தான இடங்கள்,ஆட்கள் போன்றவற்றை தாண்டிச்சென்று விளையாடும்படி உள்ளது.


இதில் பல நிலைகள் உள்ளது.கீழ் உள்ள சுட்டியில் விளையாட்டைத் தரவிறக்கவும்.

http://www.bestoldgames.net/eng/download.php


விளையாடும் முன் சில குறிப்புகள் :

1.இந்த கோப்பை முதலில் Winrar அல்லது 7z மென்பொருளைக்கொண்டு விரிக்கவும்.
2.கணிணியின் வண்ண அமைப்பை 16 பிட்டுக்கு மாற்றவும். இந்த விளையாட்டு 16 பிட்டில் தான் செயல்படும். இதற்கு டெஸ்க்டாப்பில் எங்கேயாவது வலது கிளிக் செய்து Properties-> Settings -> Color என்பதில் 16 பிட் என்பதை தேர்வு செய்யவும்.
3. பின் விரிக்கப்பட்ட போல்டரில் Play.exe என்பதை கிளிக் செய்து மெனுவிற்கு சென்று ”Load Genesis rom -> Aladdin.smd என்பதை தேர்வு செய்தால் விளையாட்டு ஆரம்பமாகிவிடும்.

விளையாட்டிற்கான குறுக்கு விசைகள்:
Start -A
Attack - S
Jump - D

தரவிறக்கச்சுட்டி : http://www.bestoldgames.net/eng/download.php

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

வினோதமான வலைப்பூக்கள்

விளையாட
57 விதமான விளையாட்டுகளை கொண்டுள்ளது இந்த வலைத்தளம். ஒவ்வொரு விளையாட்டும் வெவ்வேறு விதமான லாஜிக்குகளைக் கொண்டது.
Orisinal வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

மிகச் சிறிய வலைப்பூ
உலகிலேயே மிகச் சிறிய வலைப்பூ இது. ஒரு ஐகான் அளவே உள்ள இந்த வலைப்பூ, விளையாட்டை அடிப்படையாக கொண்டது.
guimp வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்

மிக நீளமான வலைப்பூ
18.939 கிலோ மீட்டர் அதாவது 11.77 மைல் நீளமான வலைப்பூ இது. உலகின் மிக நீளமான வலைப்பூ இது .
highest வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்

சொடுக்காமல்
இந்த வலைப்பூவில் எந்த காரணத்திற்காகவும் சொடுக்க கூடாது. இப்படி உங்கள் மௌசை பயன்படுத்தாமல் மெயில் கூட அனுப்ப முடியும் என்கின்றார்கள்.
dontclick வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

வித்தியாசமான கூகுள் சர்ச்
இந்த தளம் விதவிதமான கூகுள் தேடுபொறிக்கான தீம்களை பெற்றுள்ளது. நமக்கு பிடித்தமான ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். இது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
இங்கு சொடுக்கவும்

சிறந்த தளங்களை கண்டறிய உதவும் தேடுபொறி
நீங்கள் கொடுக்கும் பிரிவில் சிறந்த பத்து தளங்களை வரிசைப் படுத்தி காட்டுகிறது.
இங்கு சொடுக்கவும்


அனிமேசன்

மிக அழகாக அனிமேசனுக்காக வடிவமைக்கப்பட்ட வலைப்பூ இது. இதன் நடுப்பகுதியில் ஓடிடும் உருவங்களை சொடுக்கிப் பாருங்கள். அதன் செய்கைகள் வினோதமாக இருக்கும்.
அனிமேசன் வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்


ஆன்லைன் மியூசியம்

மிக அரிய தளம் இது. உலகத்தில் இருக்கும் சிறந்த மியூசியங்களை இணையப்படுத்தி இருக்கின்றார்கள்.
coudal வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.


குடும்பம்

நமது குடும்பத்தினைப் பற்றியும் முற்கால சந்ததியினரைப் பற்றியும் வருங்கால சந்ததிகள் அறிந்து கொள்ள உதவும் தளம்.
familysearch வலைப்பூவிர்கு செல்ல இங்கு சொடுக்கவும்


2000 நகைச்சுவைகள்

2000 நகைச்சுவை துணுக்குகளைக் கொண்ட வலைப்பூ இது.
jokes2000 வலைப்பூவிர்கு செல்ல இங்கு சொடுக்கவும்



பணத்தினை மடிக்கும் கலை

பணத்தினை வைத்துக் கொண்டு பல பொருள்கள் வாங்கிருப்பீர்கள்.என்றாவது மடித்து பார்த்து வித விதமாய் உருவங்களை உருவாக்கியிருக்கீர்களா. இந்த தளத்தைப் பார்த்த பின்பு கண்டிப்பாக நீங்கள் செய்து பார்ப்பீர்கள்.
foldmoney வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்

Programmer or Killer?

இந்த இணையத்தில் காட்டப்படும் நபர்களின் புகைப்படங்களை பார்த்து அவர்கள் கொலைகாரர்களா மென்பொறியாளர்களா என கண்டுபிடிக்க வேண்டும். மிகவும் வினோதமான வலைப்பூ இது.
malevole வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.


PhotoshopDisasters

புகைப்படங்களை விளையாட்டிற்காக மாற்றம் செய்து வெளியிட்டுள்ளார்கள். கொஞ்சம் கூர்மையாக நோக்கினால் அவர்கள் செய்துள்ள குறும்புகள் தெரியவரும்.
photoshopdisasters வலைப்பூவிர்கு செல்ல இங்கு சொடுக்கவும்.